ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிறித்துவம்
Written By

நிம்மதி என்பது எங்கே இருக்கிறது?; இயேசு

ஒரு பணக்காரன் தன் வீட்டுக்கு குருவை அழைத்து வந்தான். பெரிய வீடு. இருவரும் மனநிம்மதியே இல்லை என்று குருவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். குருவே! வடக்குப் பக்கம் பாருங்கள், அதோ அங்கே தெரிகிறதே, தூரத்தில் ஒரு பனமரம், அது வரையும் என்னோட இடம்தான். நான்தான் கவனித்து கொள்கிறேன்.
இந்த சொத்துக்கள் எல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தவை. யாரையும் ஏமாற்றி மிரட்டி அபகரித்தது அல்ல. இத்தனை வசதிகள் இருந்தாலும் எனக்கு நிம்மதி இல்லாமல் இருக்கு குருவே என்றான். குரு அவனை அமைதியாகப் பார்த்தார். எல்லா இடங்களிலும் சொத்து சேகரித்து வைத்திருக்கிறாய்.
 
இங்கே சொத்து சேகரித்து வைத்திருக்கிறாயா? என்று அவன் நெஞ்சைக் சுட்டி காட்டினார். பணக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அன்பு, பாசம், நட்பு போன்ற நல்ல சொத்துக்களை அங்கே சேர்க்க வேண்டும். அதுதான் நிம்மதி தரும் என்றார் குரு. நிம்மதி சொத்துக்களில் இல்லை.
 
சுயநலம் அல்லது அகந்தையை அழிக்கும் எந்த செயலும் நற்செயல் ஆகும். மனிதனை மென்மேலும் சுயநலத்தில் மூழ்கடிக்கும் எந்தத் தீய செயல்களும் சுயநலம், நற்பெருமை மற்றும் கர்வத்திலிருந்து தோன்றும். நான் எனது என்ற கர்வத்திலிருந்து தோன்றும். நான் எனது என்ற எண்ணத்தை அழித்தவன் உயரிய பூரணத்துவ நிலையை அடைகிறான். அகந்தை அல்லது சுயநலத்தை அழித்துவிட்டால் நாம் அமரத்துவம் மற்றும் நிலையான பேரானந்த நிலை என்ற எல்லையற்ற சாம்ராஜ்யத்தை அடைய முடியும்.