வில்லியனூர் மாதா குளம்

Caston| Last Modified செவ்வாய், 6 அக்டோபர் 2015 (13:17 IST)
ஆசிய கண்டத்திலேயே தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்தின் எதிரே குளம் அமைந்திருப்பது இந்தியாவில் உள்ள வில்லியனூரில் மட்டும்தான் என்பது இந்த திருத்தலத்திற்கு கிடைத்துள்ள பெருமைகளில் முக்கியமானதாகும்.

இன்று நீங்கள் பார்க்கும் இந்த குளத்தின் கரைகள் ஆரம்ப காலங்களில் கற்களால்தான் கட்டப்பட்டிருந்தது. 1923ம் ஆண்டு வில்லியனூர் லூர்தன்னை திருத்தலத்தின் பங்கு தந்தையாக இருந்த லெஸ்போன் அடிகளார் அவர்கள், தனது தீவிர முயற்சியால் குளத்தை சுற்றி செங்கற்களை கொண்டு சுவர்கள் அமைத்தார்.
1924ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்த பக்தர்கள் கொடுத்த பொருளுதவியை கொண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து லூர்து அன்னையின் சொரூபம் வரவழைக்கப்பட்டு குளத்தின் மைய பகுதியில் உள்ள தூண் மீது வைக்கப்பட்டது. இன்றைக்கும் குளத்தில் உள்ள அன்னை மரியாள் தன்னை நாடி வருவோருக்கு எண்ணிலடங்கா தேவ ஆசீரை தந்து பிணிகளை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் மாதா காட்சி கொடுத்தபோது உற்பத்தியான ஊற்றில் இருந்து கிடைக்கப்பெறும் புனிதநீர் இந்த குளத்தில் ஆண்டுதோறும் கலக்கப்படுகிறது. இந்த குளத்தின் புனித நீரினை உபயோகித்து நோய்களில் இருந்து குணமானவர்கள், லூர்தன்னையை கண்கொடுத்த அன்னை என்று போற்றி புகழ்கிறார்கள்.

புனிதம் கொண்ட மாதா குளத்தை சுற்றி முழங்காலிட்டு சுற்றி வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையின் காரணமாக, பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக குளத்தை சுற்றி முழங்காலிட்டு சுற்றி வருவது அன்னையின் மீதான நம்பிக்கையை உறுதிபடுத்துகிறது.


இதில் மேலும் படிக்கவும் :