செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிறித்துவம்
Written By Sasikala

யார் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என இயேசு கூறுகிறார்....!!

ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது. இம்மையில் துக்கம் அடைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தேற்றுவார்.

 
பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் வாக்களித்த இடத்தை அவர்கள் பெறுவார்கள். மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முழுத் திருப்தியை தேவன் அளிப்பார்.
 
மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும். தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவனின் அருகாமையிலிருப்பார்கள்.
 
அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார். நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப் படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக ராஜ்யம் அவர்களுக்குரியது.