1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. செலிபிரட்டி பயோடேட்டா
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:09 IST)

செலிபிரிட்டி பயோடேட்டா: அம்மா நடிகையின் கணவர் இந்த குணசித்திர நடிகரா...?

தமிழ் சினிமாவின் இயக்குராகவும் நடிகராகவும் பார்க்கப்படுபவர் பொன்வண்ணன். இவர் ஜமீலா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தார். 
 
பல தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள இவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தன்னுடன் பணியாற்றிய சக நடிகையான சரண்யாவை காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் 1995ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 
 
இவர்களுக்கு சாந்தினி , பிரியதர்ஷினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பொன்வண்ணன் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் அவரது மனைவி சரண்யா பொன்வண்ணன் அம்மா வேடங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றதன் அடையாளத்தில் தான் அவரது கணவர் என்ற முறையில் மக்களுக்கு பரீட்சியமானார்.