செவ்வாய், 30 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2016-2017
Written By Bala
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2016 (12:43 IST)

குறைவான ரயில் கட்டணத்தால் 30 ஆயிரம் கோடி இழப்பு.: சுரேஷ் பிரபு

குறைவான ரயில் கட்டணத்தால் 30 ஆயிரம் கோடி இழப்பு.: சுரேஷ் பிரபு
நாடாளுமன்றத்தில் 2016-17ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியபோது,

 

2500 கிலா மீட்டர் அகலபாதை அமைக்கப்படும். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 139 திட்டங்கள் செய்ல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரெயில்வே பட்ஜெட்டில் 1.21 லட்சம் கோடி மூலதனம் செய்ய திட்டம்; ஒரு நாளைக்கு 7 கிலோமீட்டர் தூரம் ரயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது ; 1,780 தாணிங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்படும்;இந்த நிதியாண்டு முடிவடைவதற்குள் 475 ரயில் நிலையங்களில் 17 ஆயிரம் பயோ கழிவறைகள் மற்றும் கூடுதல் கழிவறைகள் அமைக்கப்படும். சென்னை -  டெல்லி இடையே சரக்கு ரயில் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்: குறைவான ரயில் கட்டணத்தால் 30 ஆயிரம் கோடி இழப்பு. மூத்த குடிமக்களுக்கான கீழ் படுக்கை வசதி 50 சதவீதம் அதிகரிக்கப்படும் உள்ளிட்ட திட்டங்களை கூறினார்.