ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (10:04 IST)

விஜய்யின் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்… இயக்குனர் வம்சி போட்ட ஸ்ட்ரிக் ‘தடா’

வாரிசு படத்தின் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் அவ்வப்போது படப்பிடிப்பு சம்மந்தமான காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தெலங்கானா என இரு இடங்களிலும் மாறி மாறி நடந்து வருகிறது.  படம் சம்மந்தமாக எந்தவொரு புகைப்படமும் வெளியாவதை விரும்பாத படக்குழு பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் படப்பிடிப்பு தொடங்கியது முதலே அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ துணுக்குகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதைத் தடுப்பதற்காக இப்போது இயக்குனர் வம்சி படப்பிடிப்புத் தளத்துக்குள் யாருமே செல்போன் எடுத்து வரக்கூடாது என ஸ்ட்ரிட்க்காக தடை உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.