வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (11:45 IST)

பெரிய இடத்திலிருந்து மிரட்டல் போன் வந்தது - கங்கனா ரனவத் புகார்

சென்ற வருடம் கங்கனா ரனவத்துக்கும், ஹிர்த்திக் ரோஷனுக்கும் சனி வருடம். ஹிர்த்திக் ரோஷன் தன்னிடம் மோசமாக  நடந்து கொண்டதாக கங்கனா புகார் செய்ய, ஹிர்த்திக் தரப்பு அதனை மறுக்க, பெரிய இடம் என்பதால் சண்டையின் சத்தம்  மட்டுமே நமக்கு கேட்டது. காரண காரியம், காயங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன.

 
2017 இந்த சண்டையின் சத்தங்கள் ஓய்ந்து அமைதியாகத்தான் தொடங்கியது. மழைவிட்டாலும் தூவானம் இருக்கமல்லவா.  கங்கனா ரனவத் ஒரு நிகழ்ச்சியில் சென்ற வருட மலரும் நினைவுகளை அவிழ்த்துவிட்டார்.
 
சென்ற வருடம் பெரிய வீட்டிலிருந்து மிரட்டல் போன் கால்கள் வந்ததாகவும், வெளியே அதனைச் சொன்னால் சினிமா வாழ்க்கையையே முடித்துவிடுவோம் என்று மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
ஆறிய ரணத்தை மீண்டும் கிளற வேண்டுமா என்று கங்கனாவுக்கு அறிவுரை சொல்கிறார்கள், கங்கனாவின் ஆதங்கத்தை புரிந்து  கொள்ளாதவர்கள்.