வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 1 ஆகஸ்ட் 2020 (09:11 IST)

நான் கொலைகாரியா...? கண்ணீருடன் சுஷாந்த் காதலி வெளியிட்ட வீடியோ!

சீரியலில் இருந்து படங்களில் நடிக்க துவங்கிய சுஷாந்த் சிங் கடண்டஹ் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டது அனைவரும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பின்னர் பல காரணங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இத்தரக்கிடையில் சமீபத்தில் சுஷாந்த்தின் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நடிகை ரியா சக்ரவர்த்தி ரூபாய் ரூ15 கோடி சுஷாந்தை ஏமாற்றி வேறு ஒரு அக்கவுன்ட்டுக்கு மாற்றியுள்ளார். மேலும், ரியா ஒரு சில நபர்களுடன் சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்து துன்புறுத்தியுள்ளார்.

சுஷாந்திற்கு மன அழுத்தம் இல்லை. மன அழுத்தத்தை ரியா உருவாக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் ரியாவேதான் மருத்துவர்களை ஏற்பாடு செய்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வைத்திருக்கிறார். எனவே அந்த மருத்துவர்களை விசாரிக்கவேண்டும். அத்துடன் கடைசியாக ரியா சுஷாந்த்தை விட்டு செல்லும்போது சுஷாந்தின் க்ரெடிட் கார்டு, லேப்டாப், மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளார். என அடுக்கடுக்கான பல திடுக்கிடும் குற்றங்களை முன்வைத்தார் சுஷாந்தின் தந்தை.

இந்நிலையில் தற்ப்போது சுஷாந்தின் காதலி ரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு கடவுள் மேலும் , சட்டத்தின் மேலும் நம்பிக்கை உள்ளது. எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னை பற்றி மோசமான விமர்சனங்கள் சமூகவலைத்தளத்தில் பேசுகிறார்கள். ஆனால், அதை பற்றி இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாம் என என்னுடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

விரைவில் இதற்கான உண்மை வெளிவரும். நான் குற்றவாளி இல்லை என்பது நிரூபணமாகும் சத்யமேவ ஜெயதே என கூறி இந்த வீடியோவை முடித்துள்ளார். இதற்கு சுஷாந்த் ரசிகர்கள் வேஷம் போட்டு நீலி கண்ணீர் வடிக்காதே உன்னுடைய உண்மை ரூபம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இனிமேல் நீ தப்பிக்கமுடியாது உண்மையே வெல்லும் என விமர்சித்து வருகின்றனர்.