1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : சனி, 20 ஜனவரி 2018 (22:15 IST)

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மியூசியத்தில் மெழுகு சிலை!!

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் உள்ள பிரபல மியூசியம் ஒன்றில் மெழுகுச் சிலை நிறுவப்பட உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை சன்னி லீயோன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார். 
 
பாலிவுட் நடிகை என்றாலும், தென்னிந்திய சினிமாவில் அறிப்பட்டவர் நடிகை சன்னி லியோன். தற்போது இவர், தென்னிந்திய மொழிகளில் சரித்திரப் படமாக தயாராகவிருக்கும் வீரமாதேவி என்ர படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரபல மியூசியமான மேடம் டுசாட்டில் சன்னி லியோனுக்கு மெழுகு சிலை ஒன்றை நிறுவ இருக்கிறார்கள். இந்த மியூசியத்தில் ஏற்கெனவே அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், சச்சின் என பல பிரபலங்களின் சிலை இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.