சன்னி லியோனுக்கு குவியும் ஆதரவு: தொகுப்பாளரின் அநாவசிய கேள்விகள் (வீடியோ இணைப்பு)


Caston| Last Updated: செவ்வாய், 19 ஜனவரி 2016 (18:20 IST)
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பாலிவுட் நடிகை சன்னி லியோனிடம் அருவறுக்கத்தக்க ஆபாச கேள்விகள் கேட்ட தொகுப்பாளருக்கு இந்தி பிரபலங்கள் பலர் தங்கள் கண்டனங்களை கூறி வருகின்றனர்.

 
 
சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சியின் பேட்டியில் தொகுப்பாளர் பூபேந்திரா சௌபே சில சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டு, அது சன்னி லியோனுக்கு ஆதரவாக முடிந்துள்ளது.

 
 
அவர் கேட்ட சில சர்ச்சை கேள்விகள்:
 
நிறைய திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களால் உங்கள் மீது பயமாக உள்ளனர், இதில் உங்களுக்கு அக்கரை இல்லையா?
 
நீங்கள் அமீர் கானுடன் நடிக்க விரும்பலாம் ஆனால் அமீர் கான் உங்களுடன் நடிக்க விரும்புவாரா?
 
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னுடைய உரையில் இந்திய அறநெறிகள் கெடுவதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்கிறார் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
 
சன்னி லியோன் இந்தியாவின் புதிய விளம்பர தூதராக வந்தால், அது ஒரு ஆபத்தான போக்காக மாறாதா?
 
மேலும் இந்தியாவில் ஆபாச படங்கள் பார்ப்பது அதிகமாவது உங்களால் தான் என்னும் தொனியில் பேசினார்.
 
இவரின் அருவறுக்கத்தக்க கேள்விகளுக்கு சன்னி லியோன் மிகவும் பொறுமையுடனும், சிரித்த முகத்துடனுமே பதில் அளித்தார். இதே கேள்விகள் இவர் வேறு யாரவது ஒரு பிரபலத்திடம் கேட்டால் அவர் நிச்சயம் பொறுமை இழந்திருப்பார்.
 
இந்த பேட்டிக்கு எதிராகவும் சன்னி லியோனுக்கு ஆதரவாகவும் பல இந்தி பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :