செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 8 ஜூன் 2020 (13:32 IST)

ராஜமௌலியின் RRR படத்தில் இணைந்த நடிகை ஸ்ரேயா!

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார்.

தெலுங்கு, தமிழ் , இந்தி, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவரும் இப்படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ராஜமௌலியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை தென்னிந்திய சினிமாவே திரும்பி பார்த்தது. நெருப்பு நீர் என வித்யாசமான கான்செப்டில் வெளியான இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

சமீபத்தில் கூட நடிகை ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படி திடீரென அடுத்தடுத்து பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகை ஸ்ரேயா சரண்  இந்த படத்தின் ஃபிளாஷ்பேக்கில் அஜய் தேவ்கனுடன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் தெரிவித்துள்ளார்.