செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (11:26 IST)

சினிமா தொழிலாளர்களுக்காக ரூ.7 கோடி நிதியுதவி செய்த பிரபல நடிகர்

சினிமா தொழிலாளர்களுக்காக ரூ.7 கோடி நிதியுதவி செய்த பிரபல நடிகர்
கோலிவுட்டில் பெப்ஸி தொழிலாளர்களுக்கான ரஜினிகாந்த், அஜித், கமலஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் லட்சக்கணக்கில் நிதி உதவி செய்தனர் என்பதும் இதனால் அவர்கள் தற்போது குடும்பத்துடன் பசியின்றி வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதேபோல் பாலிவுட்டிலும் சுமார் 23 ஆயிரம் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானமின்றி பசியால் வாடுவதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், அந்த 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் சுமார் 7 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார் 
 
ஒவ்வொரு தொழிலாளர்களிடம் இருந்து அவர்களுடைய யூனியன் மூலம் வங்கி கணக்கை பெற்று ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூபாய் 3000 அவர்களுடைய வங்கி கணக்கில் தானே டெபாசிட் செய்துள்ளார். 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா ரூபாய் 3000 விதம் டெபாசிட் செய்ததால் 6 கோடியே 90 லட்சம் வரை இதுவரை அவர் நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு ஒருவேளை நீடிக்கப்பட்டால் மேலும் ரூபாய் 3000 நிதி உதவி செய்வதாகவும் அவர் 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வாக்குறுதி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் சல்மான்கான் செய்த இந்த உதவி குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது