புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (12:01 IST)

மாதவன் செய்த சிறப்பான செயல் - புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை!

நடிகை பீரீத்தி ஜிந்தா நடிகர் மாதவன் மகன் பதக்கங்களை வென்றதற்கு பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 
நடிகர் மாதவனின் மகன் ஒரு நீச்சல் வீரர் என்பதும் அவரது பதக்கங்களை குவித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில் சமீபத்தில் கோபன்ஹேகன் என்ற பகுதியில் நடந்த நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற நடிகர் மாதவன் மகன் வேதாந்த், இதனைத்தொடர்ந்து டென்மார்க் நாட்டில் நடைபெற்ற போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். 
 
இதனை மாதவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ‘வேதாந்த் பெற்ற பதக்கம், நாட்டின் பெருமைக்குரிய பதக்கம் என்றும் இளம் வீரர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்தார். வெள்ளி தங்கம் என அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து வரும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்தத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
இந்நிலையில் நடிகை பீரீத்தி ஜிந்தா நடிகர் மாதவன் மகனை பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் போட்ட பதிவு, ஆஹா, இது மிகவும் சிறப்பான செய்தி. நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா இருவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையைச் செய்திருக்கிறீர்கள். வேதாந்த் இப்படி வெற்றியில் ஜொலிப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். கடவுள் அவரை மேலும் வெற்றியுடனும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிப்பார்.