திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : புதன், 28 ஜூன் 2023 (17:11 IST)

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் Project K.... பிரபாஸின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

பாகுபலி படத்தில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகரான பிரபாஸ் தற்போது பேன் இந்தியா ஸ்டார் ஆக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிரபாஸ் தற்போது புதிய பிரம்மாண்ட படத்தில் கமிட் ஆகியுள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்போதைக்கு ‘Project K’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க வில்லனாக கமல்ஹாசன் நடிக்கின்றனர். இதுதவிர இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தி நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
 
தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை ஜதி ரத்னலு, மகாநதி படங்களை இயக்கிய நாக் அஷ்வின் இயக்குகிறார். ரூ. 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படமாக உருவாகும் இப்படத்தில் நடிக்க  பிரபாஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. ஆம். இப்படத்திற்காக பிரபாஸ் ரூ.150 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  இப்படத்தில் வில்லனாக நடிக்கும் கமல் ரூ.40 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.