செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (08:18 IST)

பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் - கல்யாணம் ஆன கையோடு நடிகையின் கணவர் கைது!

சர்ச்சைக்குரிய பாலிவுட் நாயகி பூனம் பாண்டே அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.

இதன் ஒரு படிமேலே சென்று, தனது ஆபாச வீடியோக்களுக்கென்றே தனி வெப்ஸைட் ஒன்றை இயக்கி வரும் இந்த கவர்ச்சி கன்னி அதில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு மேலும் முழு வீடியோவை பார்க்க என் வெப்சைட் பக்கத்துக்கு வாருங்கள் என அழைத்து அத்தனை ரசிகர்களையும் கிறங்கடித்து விடுவார்.

சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பேவுடன் பூனம் பாண்டேவிற்கு திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் திடீரென கடந்த செப்டம்பர் 1ம் தேதி இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி டார்ச்சர் செய்து மிரட்டுவதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகையின் புகாரின் பேரில் அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.