1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (08:47 IST)

அடுப்பு மேல் ஏறி உட்கார்ந்து அல்வா கிண்டும் புட்ட பொம்மா பியூட்டி....!

2010 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமா துறையில் தடம் பதித்தார். அதையடுத்து உலகின் சிறந்த ஆண் அழகனும் பாலிவுட் நடிகருமான ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ படத்தில் நடித்திருந்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால் பாலிவுட்டில் ராசிகெட்ட நடிகையாக முத்திரை குத்தப்பட்டார் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு திரையுலகில் நுழைந்தது தொட்டதெல்லாம் ஹிட் அடித்து அங்கு தற்போது முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த 'அல வைக்குந்தாபுராமுலு' படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பூஜா ஹெக்டேவிற்கு  நல்ல ரீச் கொடுத்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஹிட் ஹீரோயின் பூஜா ஹெக்டே அல்வா கிண்டும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவர் சமைக்கும் ஸ்டைலை கொஞ்சம் நீங்களே பாருங்கள்...