ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (07:59 IST)

விதி மீறி கட்டிடம் கட்டிய நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு நோட்டீஸ்

நடிகை பிரியங்கா சோப்ரா விதிமீறி கட்டிடம் கட்டிய வழக்கில் மாநகராட்சி நிர்வாகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கி, இன்றைக்கு  ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி பாலிவுட் நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார். அத்துடன், பே வாட்ச் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, குவாண்டிகோ என்ற அமெரிக்கன் டிவி சீரியலிலும் நடித்து வருகிறார். 
இந்நிலையில் மும்பையில் அவருக்கு சொந்தமான வணிக வளாகத்தின் அருகில், அவர் விதியை மீறி கட்டிடம் கட்டியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அவர் விதியை மீறி கட்டிடம் கட்டி இருப்பது தெரிய வந்தது. 
 
இதையடுத்து அது குறித்து விளக்கமளிக்க பிரியங்கா சோப்ராவிற்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.