என் குழந்தைகள் ஏலியன்ஸ் - கஜோலின் ஹாரர் கமெண்ட்


Caston| Last Modified செவ்வாய், 3 நவம்பர் 2015 (13:08 IST)
என் குழந்தைகள் ஏலியன்ஸோ என்று சில நேரம் சந்தேகமாகயிருக்கும் என்று கூறியுள்ளார் நடிகை கஜோல்.

 
 
கஜோல் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து, அவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்கும் பள்ளி செல்லும் பருவம். திருமணத்துக்குப் பின் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த கஜோல், விளம்பரங்களில் நடித்து வந்தார். தற்போது ஷாருக்கானுடன் ரோஹித் ஷெட்டி இயக்கும், தில்வாலே படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அனுபம் கெர்ருக்கு கஜோல் பேட்டியளித்தார். அப்போதுதான் இந்த கமெண்டை அவர் உதிர்த்தார்.
 
தனது குழந்தைகள் சிலநேரம் அதிகமாக பேசுவதாகவும், அந்த நேரங்களில் இவர்கள் என்ன ஏலியன்ஸா என்று சந்தேகம் வரும் எனவும், தனது குழந்தைகளின் அதிகபடி பேச்சை சிலாகித்து கூறினார் கஜோல்.
 
குழந்தைகளின் சேட்டைகளும், அதிகபடி பேச்சும் பெற்றோர்களுக்கு பெருமைதானே.


இதில் மேலும் படிக்கவும் :