தொடர்புடைய செய்திகள்
- பாலாவை நம்பி தான் ஆடுறா... நாமினேஷனில் பலமா சிக்கிய ஷிவானி!
- விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகளின் பங்கு உள்ளது – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய கங்கனா!
- சர்வதேச திரைப்பட விழாவில் ”வா அசுரா.. வா” – தனுஷ் மகிழ்ச்சி ட்வீட்
- படப்பிடிப்பில் திடீரென நடந்த சம்பவம்… நடிகரை இழுத்துச் சென்ற வாகனம்!
- கேஜிஎஃப் ரசிகர்களுக்கு நாளைக்கு செம்ம விருந்து!
வெறித்தனமான வெயிட்டிங்கிற்கு முற்றுப்புள்ளி! – கேஜிஎஃப் 2 டீசர் ரிலீஸ் தேதி!
இந்தியா முழுவதும் தீவிரமான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னட நடிகர் யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கி 2019ல் வெளியான படம் கேஜிஎஃப் சாப்ட்டர் 1. கன்னடத்தில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்தியா முழுவதும் பட்டித்தொட்டி எங்கும் இந்த படம் ஹிட் அடித்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என அனைத்து மொழி ரசிகர்களும் தீவிரமாக காத்துள்ளனர்.
முன்னதாக கேஜிஎஃப் சாப்ட்டர் 2 படத்தின் போஸ்டர்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது டீசர் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி எதிர்வரும் ஜனவரி 8ம் தேதி காலை 10.18 மணிக்கு கேஜிஎஃப் சாப்டர் 2 டீசர் வெளியாக உள்ளது. எப்போது டீசர் வெளியாகும் என வெறித்தனமான வெயிட்டிங்கில் இருந்த ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
