இவரது கனவே டைட்டானிக் ஹீரோவுடன் நடிப்பதுதானாம்


Sasikala| Last Updated: புதன், 24 ஆகஸ்ட் 2016 (15:58 IST)
ஜாக்குலின் பெர்னாண்டஸ் முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும், இரண்டாம் வரிசை நடிகையாகவே கருதப்படுகிறார். தீபிகா, கத்ரினா, கங்களா, கரீனா போன்று முன்னணி இடத்தைப் பிடிக்க அவரால் இன்னும் முடியவில்லை. சமீபத்தில் வெளியான டிஸ்யூம் படத்தின் வெற்றி பெரும் ஆறுதல்.

 
 
தீபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா, மல்லிகா ஷெராவத், நீது சந்திரா என்று இந்தி நடிகைகள் ஹாலிவுட் படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார்களே உங்களுக்கு அந்த மாதிரி ஆசையில்லையா என்று ஜாக்குலினிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர்,
 
என்னுடைய கனவே லியானார்டோ டிகாப்ரியோவுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் என்று பதிலளித்தார்.  
 
ஏன்... டாம் க்ரூஸ், பிராட் பிட்டுடன் எல்லாம் நடிக்க வாய்ப்பு வந்தால் மறுத்திடுவீங்களோ?


இதில் மேலும் படிக்கவும் :