பிரபல மலையாள இயக்குனர் மறைவு! கோவையில் உடல் தகனம்!
மலையாளத் திரைப்பட இயக்குனர் வினு உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்
1995 ஆம் ஆண்டு "மங்களம் வீட்டில் மனேசரி குப்தா" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இவர்.
நடிகர் ஜெயராம் நடித்த "ஆயுஸ்ஷ்மான்பவா" "குசுர்திகாற்று'" பர்த்தாவு உத்தியோகம்" போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் கடந்த 20 வருடமாக கோவை சிங்காநல்லூர் சென்ரல் ஸ்டுடியோ அருகில் ஆகாஷ் ஹொம்ஸ் என்ற இடத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை 3 மணி அளவில் உயிரிழந்தார். இன்று இவரது உடல் காலை 10.30 மணிக்கு கோவை நஞ்சுண்டாபுரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.