1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: சனி, 19 நவம்பர் 2016 (15:14 IST)

விவாகரத்தா...? ரொம்ப வேடிக்கையா இருக்கு

விவாகரத்தா...? ரொம்ப வேடிக்கையா இருக்கு
இப்படி சொல்லியிருப்பவர் வேறு யாருமில்லை, நடிகை வித்யாபாலன். 2012 -இல் வித்யாபாலன் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி நான்கு வருடங்கள் ஆனதையொட்டி சில விஷமிகள், வித்யாபாலன் தனது கணவரை விவாகரத்து செய்யவிருக்கிறார் என்று வதந்தி பரப்பி வருகின்றனர்.

 
 
அதற்கு பதிலளித்த வித்யாபாலன், 

"நானும் எனது கணவரும் விவாகரத்து செய்து பிரியப்போவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதை பார்க்கும்போது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. நான் சினிமாவில் மும்முரமாக நடித்துக்கொண்டு இருந்தபோது திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு ஐக்கியமாகி விட வேண்டும் என்று சிந்திக்கவே இல்லை. சித்தார்த் ராய் கபூரை சந்தித்த பிறகுதான் திருமணத்தின் மீது ஆசை வந்தது. திருமணத்துக்கு பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. மற்ற கணவன் மனைவிபோல் நாங்கள் இல்லை. விருந்து விழாக்களில் ஜோடியாக கலந்து கொள்வது கிடையாது. மற்றவர்கள் போல் ஜோடியாக நின்று செல்பி எடுத்து டுவிட்டரில் போடுவதும் இல்லை. கைகோர்த்துக் கொண்டும் இடுப்பில் கைபோட்டுக்கொண்டும் போவது இல்லை. இதனால்தான் நாங்கள் பிரியப்போகிறோம் என்று கூச்சல் போடுகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை" என்றார்.
 
நெத்தியடி பதில்.