திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:28 IST)

பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு ஆண் குழந்தை பிறந்தது

மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் பாலிவுட்டின் நாயகி கரீனா கபூருக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.


 
 
கரீனா கபூருக்கு இன்று காலை சரியாக 7.30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​கரீனாவின் நண்பரும் இயக்குனருமான கரன் ஜோகர் நேரில் சென்று பார்த்த பிறகு குழந்தையின் பெயரை 'தைமர் அலி கான்' என்று அறிவித்திருக்கிறார். மேலும் இதனை கரன் ஜோகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 
 
சில மாதங்களுக்கு முன்னர் கரீனா கர்ப்பம் தொடர்பாக வதந்திகள் எழுந்த நிலையில், கரீனா கர்ப்பம் குறித்து வெளியாகும் அனைத்தும் வெறும் வதந்திகள் என சைஃப் அலிகான் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.