ரியோ ஒலிம்பிக்ஸ்: யோகேஸ்வர் தத் தோல்வி


Murugan| Last Modified ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (18:11 IST)
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், மல்யுத்தம் 65 கிலோ சுதந்திர பாணி (ஃ ப்ரி ஸ்டைல்) பிரிவின் முதல் சுற்று போட்டியில், இந்திய வீரர் யோகேஸ்வர் தத் தோல்வியடைந்துள்ளார்.

 

 
ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ பிரிவில், இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் யோகேஸ்வர் தத், மங்கோலியாவின் கன்ஜோரிஜினை எதிர்கொண்டார்.
 
இந்த போட்டியின் ஆரம்பம் முதல் மங்கோலிய வீரரின் ஆதிக்கத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறிய யோகேஸ்வர் தத் , இறுதியில் 0-3 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தோல்வியைத் தழுவினார்.
 
கடந்த லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், யோகேஸ்வர் தத் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :