ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (13:06 IST)

உலக சாக்லேட் தினம்: சாக்லேட் பிரியரா நீங்கள்? இதை கண்டிப்பாக படியுங்கள்

உலக சாக்லேட் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சாக்லேட் தொடர்பாக அறியப்படாத தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

எழுத்தாளர் ஜேன் சீப்ரூக் உருவாக்கிய ஃபர்ரி லாஜிக் தொடரில் இப்படியாக ஒரு வரி வரும், "சொர்க்கத்தில் சாக்லேட் இல்லையென்றால் நான் அங்கு செல்லமாட்டேன்" என்று. ஆம், இங்கு சாக்லேட் சுவையை விரும்பாமல் இருப்போர் வெகு சிலரே. பல்வேறு இசங்களை பின்பற்றுவோர் இணையும் ஒரு புள்ளி சாக்லேட்தான்.

பால்யகால நினைவுகளை நாம் அசைபோட்டால், ஏதோவொரு ஒரு சாக்லெட்டின் வாசனை நம் நாசியில் வந்து செல்லும். பால்யத்தில் சாக்லெட்டை கடந்து வராதவர்கள் யாரும் இலர்.

நாளை உலக சாக்லேட் தினம். அதனால், சாக்லேட் குறித்து ஐந்து தகவல்களை இங்கு பகிர்கிறோம்.

சாக்லேட் உடல்நலத்திற்கு நல்லதா?

பிரிட்டனில் உள்ள சில ஊட்டச்சத்து நிபுணர்கள் டார்க் சாக்லேட் உண்பது ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்கிறார்கள். அதுபோல, இதயத்திற்கும் மில நல்லது என்கிறார்கள் . ஞாயாபக சக்தியை மேம்படுத்தும் என்று சொல்லும் ஊட்டச்சத்து நிபுணர்கள், புற்று நோய் பாதிப்பை குறைக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

என்ன வகையான சாக்லேட் உண்கிறீர்கள் என்பது முக்கியமா?

இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற எரிக் கொர்நெல், "எனது அனைத்து வெற்றிக்கும் பின்னாலும் நான் உண்ட சாக்லேட் இருக்கிறது என்று நினைக்கிறேன்" என்றார். மேலும் அவரே, "பால் சாக்லேட் உங்களை முட்டாளாக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. டார்க் சாக்லெட் தான் சரி" என்றார்.

அவரே நகைச்சுவையாக, "மருத்துவத்திலோ அல்லது வேதியலிலோ நீங்கள் நோபல் பரிசு வாங்க விருப்பப்பட்டால் என்ன சாக்லேட் வேண்டுமானாலும் உட்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் இயற்பியலில் நோபல் பரிசை விரும்பினால் நீங்கள் நிச்சயம் டார்க் சாக்லேட்டை உண்ண வேண்டும்" என்றார்.

நகைச்சுவை ஒருபுறம் இருக்கட்டும். மருத்துவமாக பேசினால், சாக்லேட் உண்பதால் ஏற்படும் உடல்நலப் பயன்கள், சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவுடன் தொடர்புடையது. கோகோவில் ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. கோகோ கசப்புதன்மை உடையது. ஆனால், அதே நேரம் சுவைக்காக அதில் சேர்க்கப்படும் பால் மற்றும் சர்க்கரை, இந்த ஆண்டிஆக்ஸிடெண்ட்தன்மையை குறைக்கிறது. இதன் பொருள், டார்க் சாக்லேட் மற்ற சாக்லேட்டுகளைவிட நல்லது என்பதுதான்.

சாக்லேட் நினைவாற்றலுக்கு சிறந்ததா?

அண்மையில் ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், ஒரு வாரத்திற்கு ஒருமுறை சாக்லேட் உட்கொண்டால் கூட நினைவாற்றல் மேம்படும் என்பது தெரியவந்துள்ளது.

அதுபோல மற்றொரு ஆய்வு, கோகோவில் உள்ள வேதி பொருட்கள் வயது மூப்பால் ஏற்படும் ஞாபக மறதியை சரி செய்யும் என்றும் தெரியவந்திருக்கிறது.

சரி எவ்வளவு சாக்லேட்களை நாம் உட்கொள்ளலாம்?

அதிகமான சாக்லேட் சாப்பிடுவதால் நமக்கு அதிகமான ஞாபக சக்தி எல்லாம் கிடைக்காது. ஏனெனில், சாக்லேட் தயாரிப்பின்போது, ஞாபகசக்திக்கு காரணமாக கருதப்படும் ஃப்ளவோனொல்ஸ் நீக்கப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.