செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:47 IST)

தங்க சுரங்கத்துக்கு வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்து - 500 கட்டடங்கள் தூள்

தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி பைக் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் பலர் உயிரிழந்தனர்.


மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் ஊரகப் பகுதியில் நடந்த இந்த விபத்தில் சுமார் 500 கட்டடங்கள் நொறுங்கியதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் செஜி சாஜி அமெடோனு கூறியதாகத் தெரிவித்துள்ளது ராய்டர்ஸ் செய்தி முகமை. 10 சடலங்களைப் பார்த்ததாக வட்டார அவசரகால அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் கூறுகிறது ராய்டர்ஸ்.

பொகோசோ - பாடி நகரங்களுக்கு இடையே உள்ள அபியேட் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. சிரானோ பகுதியில் உள்ள மக்சாம் நிறுவனத்துக்கு சொந்தமான தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள்களை ஏற்றிச் சென்றபோது இந்த லாரி ஒரு மோட்டார் பைக் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.