நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்பதை உறுதி செய்ய மரபணு சோதனை நடத்தக் கோரி தம்பதியர் மனு


Last Modified வியாழன், 2 மார்ச் 2017 (18:36 IST)
நடிகர் தனுஷ் தங்களது மகன் என்பதை உறுதி செய்ய மரபணு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரி மதுரையின் மேலூரை சேர்ந்த ஆர்.கதிரேசன் மற்றும் கே.மீனாட்சி தம்பதியர் இன்று ( வியாழக்கிழமை) தாக்கல் செய்த மனு உள்ளிட்ட இந்த வழக்கு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மேலும் நடிகர் தனுஷ் தொடர்பான இந்த வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.அத்தோடு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெறும் இந்த வழக்கில் உத்தரவு வெளியாகும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதன்படி நடிகர் தனுஷ் கடந்த செவ்வாய்க்கிழமை 2 ஆம் தேதியன்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். அப்போது அவரிடம் அரசு மருத்துவர் ஆய்வு மேற்கொண்டனர்.

வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது தனுஷின் அங்க அடையாளங்களை பரிசோதித்த அந்த மருத்துவர் தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கை தொடர்பான விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், தனுஷிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட மனுக்கள் மீதான விசாரணைகளும் வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :