வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 13 நவம்பர் 2021 (11:40 IST)

பிரான்சின் எலீசே அரண்மனை பெண் ராணுவ வீரருக்கு பாலியல் துன்புறுத்தலா?

பிரான்ஸ் நாட்டின் அதிபர் மாளிகையான எலீசே அரண்மனையில் பணிபுரிந்த பெண் காவலர் ஒருவர், கடந்த ஜூலை மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. 

பாரீஸ் நகரில் உள்ள அதிபர் மாளிகையி பணிபுரியும் பெண் ராணுவ வீரரை துன்புறுத்தியதும் ஒரு ராணுவ வீரர்தான் எனவும், அது தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் மீது முறையாக வழக்கு தொடுக்கப்படவில்லை எனவும் செய்திகள் வெளியாயின. இது தொடர்பான செய்தியை லிபரேஷன் என்கிற செய்தித்தாள் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
 
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் மற்றும் துன்புறுத்தியவர் இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியும் எனவும், அவர்கள் இருவரும் அதிஉயர் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.
 
இப்பிரச்சனை தொடர்பான விவரங்கள் கிடைத்த பின், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிபர் மாளிகை அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி முகமையிடம் கூறினார். குற்றம் சுமத்தப்பட்டவர் மற்றும் பாதிப்புக்கு ஆளான பெண் இருவரும் வெவ்வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை கூறியுள்ளது.