1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (10:14 IST)

உலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் - எதற்கு?

வட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற உடலில் ஜிபிஎஸ்  பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 

தனியே இருக்கும் அந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கி எப்போது எங்கு இருக்கிறது என்பதை வனத்துறை அதிகாரிகள் தெரிந்துகொள்ள, இது உதவும் என்று  இயற்கைவள பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
 
அரிதான ஒரு மரபணு நிலையால், வெள்ளை நிறத்தில் இந்த ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது.
 
கடந்த மார்ச் மாதத்தில் இதன் குடும்பத்தை வேட்டையாடுபவர்கள் கொன்றனர்.
 
இதே வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கியும், அதன் ஏழு மாத குட்டியும் கொல்லப்பட்டதை தொடர்ந்து, எழுந்த அச்சம் காரணமாக ஜிபிஎஸ் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
கென்யாவில் 2016 மார்ச்சில்தான் முதன்முதலில் வெள்ளை ஒட்டகச்சிவிங்கள் காணப்பட்டன.
 
ஆப்ரிக்க நாடுகளில் காணப்படும் ஒட்டகச்சிவிங்கிகள், மாமிசம் மற்றும் உடல் பாகங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன.