தலித் குடும்பங்களுக்கு 5 ஏக்கர் நிலம் தராவிட்டால் ரயில்களை தடுப்போம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (13:05 IST)
ஒரு மாத காலத்திற்குள் குஜராத்தில் உள்ள ஒவ்வொரு தலித் குடும்பத்துக்கும் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படாவிட்டால், குஜராத்தில் ரயில்களை தடுப்போம் என்று இந்தியாவின் தாழ்த்தப்பட்ட இனமான தலித் சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூறியுள்ளனர்.
 
 
தங்களுடைய பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக கருதப்படும் இறந்த கால்நடைகளை அகற்றும் பணியை இனி செய்ய மாட்டோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
 
சுமார் 10,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், 10 நாட்களாக குஜராத் தலைநகரிலிருந்து உனா நகரத்துக்கு பேரணி மேற்கொண்டுள்ளனர்.
 

 
கடந்த மாதம், இறந்த பசுமாட்டின் தோலை உரிப்பதற்காக அதனை தூக்கிச் சென்ற 4 தலித் ஆண்கள், பசுக்களின் காவலர்கள் என்று தங்களை தாங்கே அழைத்துக் கொள்பவர்களால் பொதுவெளியில் தாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த போராட்டம் வெடித்துள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :