வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (20:04 IST)

இந்தியர்களைப் பற்றி தவறாக விமர்சித்த பாகிஸ்தான் நடிகர்

பிரிட்டனில் நீண்ட காலம் ஒடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடரான "கொரோனெஷன் ஸ்ட்ரீட்டில்" நடித்துவரும் நடிகர், இந்தியர்களைப் பற்றி தவறான கருத்துகளை வெளியிட்டதற்காக தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 

 
45 வயது மார்க் அன்வர் என்னும் அந்நடிகர், கொரோனெஷன் ஸ்ட்ரீட்டில் 2014 ஆம் ஆண்டிலிருந்து ஷரிஃப் நசிர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்; அவரின் இந்த செயலுக்கான உடனடி விளைவாக தொடரிலிருந்து நீக்கப்படுகிறார் என ஐ டிவி தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அவரின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கில் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இந்தியர்களை தவறாக விமர்சித்தது போன்ற படம் வெளியாகியுள்ளது. இந்தியர்களை குறிக்க தவறான வார்த்தைகள் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
அந்த புகைப்படம் முதலில் சண்டே மிரர் செய்தித்தாளில் வெளியானது. அதில் பாகிஸ்தானிய நடிகர்கள் இந்தியாவில் பணிபுரிவதை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவம் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவரை கொன்றதாக தெரிவித்ததையடுத்து அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன.
 
இது குறித்து ஐ டிவி நிறுவனம், தாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும் இது முழுக்க முழுக்க ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்துள்ளது.