திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (20:33 IST)

இசைக்கருவி வாசிக்கும் கலைஞர்களுக்கு பிரிட்டன் மருத்துவர்கள் எச்சரிக்கை

நாதஸ்வரத்தைப் போல, பிரிட்டனில் தாமிரத்தாலான பேக்பைப் இசைக் கருவியை வாசிக்கும் கலைஞர்களுக்கு மருத்துவர்கள் அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள்.


 
 
அந்தக் கருவியின் குழாயை முறையாக, அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால், அதில் பல ஆண்டுகளாகப் படியும் அழுக்கு, உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
அதுபோன்று, ஓர் இசைக்கலைஞரின் பேக்பைப்பில் படிந்த அழுக்கு, அவரது நுரையீரலில் குணப்படுத்த முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, 61 வயதான அவர் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தோரக்ஸ் மருத்துவ இதழில் விவரிக்கப்பட்டுள்ளது.
 
வாசிக்கும் இசைக்கருவிகளின் உள்பக்கக் குழாய்களில் அபாயகமான நோய்க் கிருமிகள் படியாமல் தடுக்க, இசைக் கலைஞர்கள் தங்கள் கருவிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவறுத்தியுள்ளனர்.
 
அதேதான் நம் நாட்டு நாதஸ்வரம் கருவி வாசிக்கும் கலைஞர்களுக்கும். இதை கவனத்தில் கொண்டு கலைஞர்கள் செயல்பட வேண்டும்.