9/11 தாக்குதல்: 15 ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் அமெரிக்கா


லெனின் அகத்தியநாடன்| Last Updated: ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (20:52 IST)
அமெரிக்காவில் சுமார் 3,000 உயிர்களை பலி வாங்கிய 9/11 தீவிரவாத தாக்குதலின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளை அந்நாடு அனுசரிக்க உள்ளது.
 
 
இந்த தாக்குதலை தொடர்ந்து, உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் மற்றும் தீவிரவாத தாக்குதலில் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
 
வெள்ளை மாளிகையில், காலை 8.46 மணிக்கு அதிபர் ஒபாமா நினைவு நாள் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
 
நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு டவர் பகுதியில் கடத்தப்பட்ட விமானம் ஒன்று மோதியது முன்பு இதே நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அந்த சம்பவம் அமெரிக்காவின் பெருநிலப்பரப்பில் மோசமான தீவிரவாத தாக்குதலின் தொடக்கத்திற்கான அறிவிப்பாக இந்த சம்பவம் நடைபெற்றது.
 

 
பின்னர், இரட்டை கோபுரம் இடிந்து விழந்த இடமான கிரவுண்ட் ஜீரோ பகுதியில், உயிரிழந்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு நினைவு கூறப்பட உள்ளது.
 
இந்த 9/11 தாக்குதலின் விளைவாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகைள் ஆரம்பமாகின.
 
அதுமட்டுமின்றி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜிஹாதிகள் அதிகமாக ஈர்க்கப்பட இந்த சம்பவம் தூண்டுதல் அளித்திருக்கிறது. மேலும், பாலி தீவு முதல் பிரஸெல்ஸ் வரை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட இந்த தாக்குதல் முக்கியமாக அமைந்தது.

இதில் மேலும் படிக்கவும் :