மீண்டும் தலைதூக்கும் போலியோவை ஒழிக்க சர்வதேச முயற்சிகள்

Last Updated: திங்கள், 5 மே 2014 (16:36 IST)
உலகில் போலியோ இல்லாத நாடுகள் என்று ஒரு காலத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட நாடுகளில் மீண்டும் அந்த நோய்-வைரஸ் பரவிவருவதாக சான்றுகள் உள்ள நிலையில், போலியோவை ஒழிப்பதற்கான புதிய வழிகாட்டல் விதிமுறைகளை உலக சுகாதார ஸ்தாபனம் இன்று திங்கட்கிழமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முடத்தை ஏற்படுத்தக்கூடிய, பெரும்பாலும் சிறார்களை தாக்கக்கூடிய போலியோ நோயை தடுப்புமருந்து மூலம் தவிர்த்துவிடலாம்.
 
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் போலியோ பரவலாகக் காணப்படுகிறது.
ஆனால், சிரியா மற்றும் இராக் உள்ளிட்ட மற்ற நாடுகளில் அண்மைக் காலங்களில் மீண்டும் இந்த நோய் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
 
பாகிஸ்தானுக்கான பயணத்தில் கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற நடவடிக்கைகள் போலியோ வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளில் உள்ளடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பு மருந்துப் பணியாளர்கள் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் தாக்குதல்களை சந்தித்துவருகின்றனர்.
 
அங்கு தடுப்பு மருந்து என்ற போர்வையில் மேற்குலகம் ரகசியமாக குடும்பக் கட்டுப்பாட்டுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருவதாக தாலிபன்கள் குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :