செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ஆண்டு ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (11:10 IST)

புத்தாண்டு ராசிபலன்: துலாம் ராசியினருக்கு 2023 எப்படி இருக்கும்?

துலாம்: சித்திரை , 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)


உங்களுக்கு இந்த ஆண்டு குடும்ப நலம் சீராக இருக்கும். சங்கடங்களைச் சமாளிக்கக்கூடிய துணிவு பிறக்கும். பொருளா தார நிலையில் கெடுதல் ஏற்படாமலும் காப்பாற்றப்படுவீர்கள். இந்த நற்பலன்கள் ஏற்படுவது உறுதி. இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அலைச்சலும் தவிர்க்க முடியாமற் போகும். உடல் நலம் பாதிக்கப்பட இடமுண்டு. கவனம் தேவை. உறவினர்கள் மூலம் ஏதேனும் தொல்லை உண்டாகலாம். அதையும் சமாளித்து விடுவீர்கள். கவலை வேண்டாம். பணச்சங்கடம் வராமல் இருக்க வாய்ப்புண்டு. பெரி யோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். தெய்வப்பணி, தருமப்பணிகளில் ஈடுபட்டுவந்தால் கவலை குறையும்.

உத்தியோகத்தில் தெம்பும், தைரியமும் அதிகம் ஏற்படும். இயந்திரப் பணியில் ஈடுபட்டுள்ளோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோருக்குக் குறை உண்டாகாது. நன்மையும், தீமையும் கலந்தவாறு நடக்கும்.

வியாபாரி களுக்கு அளவான லாபம் உண்டு. அலைச்சல் தவிர்க்க முடியாமற் போகலாம். விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருந்தால் எந்த வில்லங்கமும் வராமல் காத்துக் கொள்ளலாம். மருத்துவர் கள், பொறியியல் துறை வல்லுநர்கள் புதிய முயற்சியில் ஈடுபடலாம்.

அரசியல்வாதிகளுக்குச் சோதனை ஏற்படலாம். மனத்துக்கு மிகுந்த சங்கடம் உண்டாகக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஏற்பட லாம். ஆனால் எதையும் துணிவோடு சந்திக்கும் ஆற்றல் ஏற்படவும் இட முண்டு. தெய்வ காரியங்களில் ஈடுபட்டு வந்தால் தொல்லை குறையும்.

கலைத்துறை நல்லவிதமாக நடக்கும். எதிர்த்துப் போராடி சிற் சில பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். பொதுவாக அலைச்சலும், கடும் உழைப்பும் தவிர்க்க முடியாத நேரம்தான் இது. துணிவுடன் எதையும் எதிர் நோக்கம் ஆற்றல் இருக்கும்.

பெண்களுக்கு கணவன் - மனைவி உறவு களிப்புடன் விளங்கும். பந்துக்களால் ஏதேனும் பிரச்சினை உண்டாகலாம். கவனமாக இருங்கள். உங்களுடைய கௌரவம், ஓங்கும். பொருளாதார வளர்ச்சி குடும்ப நலம், தொழில் வளம், பதவி உயர்வு போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

மாணவர்கள் அளந்து பேசினால் நன்மை பெருகும். நற்காரியங்களை உத்தேசித்து நல்ல மனதோடு அணுகும் விஷயங்களில் வெற்றி உண்டாகும். புதிய சிநேகிதம், புதியவர்களுடன் எந்தவிதத்திலும் தொடர்பு கொள்வது போன்றவற்றை அறவே நீக்கவேண்டும். மீறினால் ஏமாற்றப் படுவீர்கள்.

சித்திரை 3, 4 பாதங்கள்:
இந்த ஆண்டு தொழிலில் மிகுந்த அக்கறையுடன் இருப்பது அவசியம். வியாபாரிகளுக்குப் அனுகூலமாக இருக்கும். வியாபாரி களுக்கு சிறு நஷ்டம் இருக்குமானாலும் பின்னர் ஆதாயமாக இருக்கும். விவசாயிகளுக்குப் பிரச்சினை உண்டாகாது. கலைத்துறை சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் பிரச்சினைகள் உருவாகாது போக இட முண்டு. உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். ம்னதில் சில குறை உண்டாகலாம். அதை சரி செய்து விடுவீர்கள். பணக்கஷ்டம் இருக்காது. ஆனால், உழைப்பு அதிகமாக இருக்கும். அலைச்சல் இருக்கும்.

சுவாதி:
இந்த ஆண்டு உடல் நலம் சீராக இருக்கும். மிகவும் உன்னதமான நேரம் நடந்து கொண்டிருக்கிறது. திருமணம், மகப்பேறு போன்ற பாக்கியங்கள் உண்டாகலாம். வேலை தேடிக்கொண் டிருப்பவர்களுக்கு வேலையும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும். விவசாயிகளுக்குப் பிரச்சினை ஏதும் உருவாகாது. என்றாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இழிச்சொல்லுக்கு உள்ளாக நேரலாம். எச்சரிக்கை தேவை.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த ஆண்டு தம்பதியரிடையே மகிழ்ச்சி மேலோங்கும். தகாத காரியங்களைச் செய்யச் சொல்லி உங்களைத் தடுமாற்றத்துக்கு உள்ளாக்கும் க நிலைமை வரலாம். எச்சரிக்கை. அன்றாடப் பணிகளில் சிரத்தையுடன் செயலாற்றுங்கள். தப்பித்துக் கொள்ளலாம். தொழிலாளர்களுக்கு விசேட நற்பலன்கள் உண்டாகும். திருமணம் போன்ற நற்காரியங்கள் நிகழவும் வாய்ப்புண்டு. கலைத்துறை சம்பந்தப்பட்ட பணிகள் சுறுசுறுப்படையும். கணவன் மனைவி உறவு களிப்புடன் விளங்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.