வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (12:44 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (மேஷம்)

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் களத்திர ஸ்தானத்திலிருந்து  அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
அஷ்டம ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும்,  ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
 
பலன்: எப்பொழுதும் நம்பிக்கையுணர்வுடன் செயல்பட துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் பொதுவாக வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியிடங்களில் செல்வாக்கு உயரும்.
 
குடும்பத்தில்  சகோதர சகோதரிகளுக்கு இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். திருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை போன்றவை சரியாகும். சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நடந்தேரும். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.
 
தொழிலில் சில நஷ்டங்களையும், நலிவுகளையும் சந்தித்திருப்பீர்கள். எடுத்த காரியத்தில் தடை, முதலீடு செய்த அசல் கிடைக்காமல் நஷ்டம் என மோசமாக  இருந்த காலகடம் மாறும். தொழிலில் இதுவரை விரையமான பணம் திரும்ப கிடைக்கும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு இதுவரை வரவேண்டிய பணம் வந்து சேரும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்களின் காரியங்கள் அனைத்திலும் குரு பகவான் துணை நிற்பார். காரியத்தடைகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். மாணவர்கள்  பெரிய மாற்றம் இல்லை என்றாலும் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் பின்னடைவு இல்லை.
 
அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் தரும் பெயர்ச்சியாக இருக்கும். உங்கள் மேலிடத்தில் இருந்து உங்களுக்கு சில புதிய மற்றும் முக்கிய பொறுப்புகள்  தருவார்கள்.
 
கலைத்துறையினர் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கதை எழுதுபவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும்.
 
அஸ்வினி: இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் பிரச்சனைக்கு முடிவெடுக்க முற்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள்  நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் தெளிவாக இருந்தாலே நல்லது நடக்கும்.
 
பரணி: இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை  உணருவீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முற்படுவீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்திசாதுர்யம் உங்களுக்கு உண்டு. ஆனால் வீட்டில் உங்கள் நிம்மதி குறையும் நிலை காணப்படும்.
 
கார்த்திகை 1-ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியால்  தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். வார்த்தைகளை கோர்த்துப் போட்டு பேசுவது நன்மை தரும்.
 
பரிகாரம்: தினமும் விநாயகரை வழிபட்டு காரியத்தை துவங்குங்கள்.