செவ்வாய், 27 பிப்ரவரி 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (12:54 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (ரிஷபம்)

ரிஷபம்:  (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
களத்திர ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக தைரிய வீரிய  ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
 
பலன்: பிறர் மனதை புரிந்து கொண்டு செயல்படும் ரிஷப ராசி  அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் தொழிலில் ஏற்றம் காணப்படும் என்பதை பொதுவாக உங்கள் நட்சத்திரத்திற்கு  சொல்ல்லாம். மற்றவர்கள் தலையீடு குடும்பத்தில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது.
 
குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலையில் தொய்வு இருந்திருந்தால், அவர்கள் முன்னேற குரு பகவான் அருள்புரிவார். தந்தையாருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். இருவரும் பேசி முடிவுகளை எடுப்பீர்கள்.
 
தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்களை ஏமாற்றுபவர்களை கண்டுபிடிப்பீர்கள். ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செயல்படும் எண்ணம் தோன்றும். யாரையும் நம்பி ஏமாறாமல் கவனமுடன் இருப்பீர்கள்.
 
உத்யோகஸ்தர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். வேலையில் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். முழு மனதுடன் வேலையில் ஈடுபடுவீர்கள்.
 
பெண்களில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் தங்களின்  பேச்சுத்திறமையால் முன்னேற முடியும். எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.
 
அரசியல்துறையினர் கட்சிப் பணிகளில் சிரத்தையுடன் செயல்பட்டால் உங்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கட்சித் தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
 
கலைத்துறையினருக்கு தாயாரிப்பாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். கவலை வேண்டாம்.
 
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில்  அனைவருடைய ஒத்துழைப்பும் ஒருசேர கிடைக்கப் பெறுவீர்கள். யார் எவர் என்று பாராமல் அனைவருக்கும் உதவியும் புரிவீர்கள். உடன் பணிபுரிவோர் ஆதரவாக இருப்பார்கள்.உடன் பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்துப் போவது உத்தமம்.
 
ரோகிணி: இந்த குரு பெயர்ச்சியில் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் எழலாம். கவனமுடன் இருப்பது மிக முக்கியம். கிடைத்த வாய்ப்புகளை தவறாமல்  பயன்படுத்துங்கள்.  திருமண முயற்சிகள் கை கூடும். நேரம் கிடைக்கும் போது ஓய்வு அவசியம்.
 
மிருக சீரிஷம்1, 2 ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியில்  வருமானம் திருப்திகரமாக இருக்கும். கைக்கு வராது என்றிருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை குறித்த நேரத்தில் முடித்து அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள
 
பரிகாரம்: பெருமாள் கோவிலுள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை வலம் வரவும்.