வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (11:38 IST)

ரிஷபம் - மார்கழி மாத பலன்கள்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) - கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் ராகு - ரண, ருண ரோக, சத்ரு ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, புதன்  - அஷ்டம்  ஸ்தானத்தில் சூர்யன், சனி  - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாபஸ்தானத்தில் சந்திரன்  ஆகிய கிரகங்கள்  வலம் வருகின்றன. 
பலன்:
 
வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் தன்மை உடைய ரிஷப ராசியினரே இந்த மாதம் திடீர் டென்ஷன் உண்டாகும். நண்பர்கள்,  உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக  வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில்  ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது.
 
உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள். புதிய பணியில் சேர்ந்தவர்களுக்கு  அமைதியான முறையில் மனச்சஞ்சலங்கள் விலகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும் காலமிது.  எதிர்பாராத செலவுகள் நேரிடலாம். புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். புதிய கடனுக்கான முயற்சிகளை முடித்துக் கொள்ளுதல்  நன்மை பயக்கும்.
 
வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். நண்பர்கள் உண்மையான நட்புடன் பழகுவார்கள். அவர்களுடன்  சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சந்தைகளை நாடி பொருட்களை  விற்பனை செய்வீர்கள். அரசு வழியிலும் சில நன்மைகள் உண்டாகும்.
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன்மூலம் புகழும் நல்ல வருமானமும் பெறுவீர்கள். துறையில் பிரபலமானவர்களை  சந்திப்பீர்கள். சமுதாயப் பணி செய்து உங்களின் பெயரை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள்  ஏற்பட்டாலும் கணவரின் அன்பால் அவற்றிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு கோர்ட் விஷயங்களில் சுமூகமான முடிவுகள் வந்து சேரும். சிலருக்கு வழக்கில் வெற்றி அடைவதற்குண்டான  வாய்ப்புகளை ஏற்படும். 
 
மாணவமணிகள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதனால் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். பெற்றோர்  மற்றும் ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். மற்றபடி உடல் ஆரோக்யத்திற்குத் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
 
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக  பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும்.
 
ரோகிணி:
 
இந்த மாதம் தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை  கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.  தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது.
 
மிருகசிரீஷம் 1, 2, பாதம்:
 
இந்த மாதம் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன்  கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த  வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். 
 
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலை வலம் வாருங்கள். துளசிமாலையை பெருமாளுக்கு அர்ப்பணிக்கவும். எல்லாம் நல்லதே  நடக்கும்.
 
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
சந்திராஷ்டம தினம்: ஜனவரி 5, 6 
அதிர்ஷ்ட தினம்: டிசம்பர் 27, 28.