Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:12 IST)
செப்டம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்:  கும்பம்
 
கிரகநிலை:
ராசியில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயனசயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.
 
இம்மாதம் 06ம் தேதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 07ம் தேதி செவ்வாய் பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 13ம் தேதி புத பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பம்.
இம்மாதம் 14ம் தேதி குரு பகவான் விரைய ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூர்ய பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 27ம் தேதி சனி பகவான் விரைய ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
 
மனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகம் பெற்ற கும்ப ராசியினரே நீங்கள் அதிகமாக உழைப்பவர்கள். இந்த மாதம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
 
தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
 
குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயங்களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். 
 
பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். 
 
கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். 
 
அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும்.
 
மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. 
 
அவிட்டம் - 3, 4:
இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். 
 
சதயம்:
இந்த மாதம் எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாகும். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.
 
பூரட்டாதி -1, 2, 3:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். 
 
பரிகாரம்: வாராகி தேவியை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 28, 29, 30

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments