திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (15:06 IST)

மார்ச் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


கிரகநிலை:
ராசியில்  சுக்ரன் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் -  சுக ஸ்தானத்தில் ராஹூ - தொழில்  ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது -    லாப ஸ்தானத்தில்  புதன் (வ)  -  அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.
23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல மற்றவர்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நான் செல்வது தான் சரி என்று உறுதியாக கூறும் மீன ராசியினரே இந்த மாதம் காரிய அனுகூலங்களை தரும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலை பளு குறையும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள்.

கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும்.

அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள்.

பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு  பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்:
புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். சக வியாபாரிகளுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் வழி கிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.

உத்திரட்டாதி:
வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. உங்கள் சமயோஜித புத்திக் கூர்மையால் திடீரென்று வரும் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். 

ரேவதி:
சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. ஆனாலும் பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7