ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (14:51 IST)

மார்ச் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


கிரகநிலை:
சுக  ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் புதன் (வ) -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன்  -  களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் -  அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் -   தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
வேகத்திலும்  விவேகம் தேவை என்பதை உணர்ந்து வேகமாக எதையும் செய்தாலும் அதில் உள்ள நன்மை தீமை அறிந்து செயல்படும் கன்னி ராசியினரே  இந்த மாதம் பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக  இருக்கும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய  வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை  தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகள்  வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.

கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.

அரசியல்வாதிகளுக்கு  மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.

பெண்களுக்கு  வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

மாணவர்களுக்கு  கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:
கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

அஸ்தம்:
பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.

சித்திரை 1, 2, பாதம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள்  கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

பரிகாரம்:  ரங்கநாதரை அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: 27, 28,
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21