புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (12:15 IST)

துலாம் - மார்கழி மாத பலன்கள்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்) - கிரகநிலை: ராசியில் சுக்கிரன் - தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு,  புதன்  - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், சனி - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண, ருண,ரோக சத்ரு  ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் ராகு ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
 
எளிதில் மற்றவரை கவரும் வகையில் திறமையாக செயல்படும் துலா ராசியினரே இந்த மாதம் காரியங்களில்  தடைதாமதம் ஏற்படலாம்.  பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த  ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது  நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக  இருக்கும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனாலும் புதிய வேலைகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களின் அன்பும்,  ஆதரவும் தொடர்ந்து இருப்பதால் உங்கள் வேலைகள் அனைத்தும் பிரச்னையின்றி நிறைவேறும். தெளிவான மனத்துடன் பணியாற்றுவீர்கள்.  ஆனாலும் அலுவலக ரீதியான பயணங்களை விருப்பமில்லாமல் செய்வீர்கள். 
 
வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் நிலவிய பிரச்னைகள் விலகும். வருமானம் உயரும். வங்கிக் கடன்கள் சரியான நேரத்தில்  கிடைக்கும். புதிய யுக்திகளைப் புகுத்தி விரைவாக விற்பனை செய்வீர்கள். ஆனால் உங்கள் எண்ணங்கள், திட்டங்களை நண்பர்களிடம்  பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். 
 
அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் நண்பர்களாகி  விடுவார்கள். உங்களின் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட இலக்குகளை எட்டும். உங்களின் நெடுநாளைய லட்சியம் நிறைவேறும்.  தொண்டர்களை அரவணைத்து நடந்துகொள்ளவும். 
 
கலைத்துறையினர் சிறிது ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டாலும் ஓரளவே புகழ் கிடைக்கும்.  மற்றபடி வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சக கலைஞர்களின் உதவி உங்களை உற்சாகப்படுத்தும். 
 
பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி  வருவார்கள். அதேசமயம் உங்கள் கடமையை சரிவர ஆற்றுங்கள். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள். 
 
மாணவமணிகள் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். வெளி விளையாட்டுகளைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.  பெற்றோர்களின் ஆலோசனைப்படி நடக்கவும்.
 
சித்திரை 3, 4 பாதம்:
 
இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும்.  அரசியல்வாதிகள் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.
 
சுவாதி:
 
இந்த மாதம் எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படுவீர்கள். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி  கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
 
விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
 
இந்த மாதம் சிறந்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன்  மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள்  ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். 
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவக்ரஹ சன்னிதியை ஒன்பது முறை வலம் சென்று  வழிபடவும். தாமரை மலரை குருவுக்கு அர்ப்பணித்து பிரார்த்தனை செய்யுங்கள். 
 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
சந்திராஷ்டம தினம்: டிசம்பர் 20, 21, 22 
அதிர்ஷ்ட தினம்: ஜனவரி 10, 11.