திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (16:35 IST)

ஜூன் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

 
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், குரு - பஞ்சம ஸ்தானத்தில் புத, ராஹூ, சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
 
கிரகமாற்றங்கள்:
06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
சாதனை வில் என்பதற்கேற்ப சராசரி மனிதனாய் பிறந்து நல்ல செயல்கள் செய்தும் பொறுப்பாக பணி செய்து பேரும் புகழும் பெருமையும் அடையும் தனுசு ராசி அன்பர்களே,

இந்த மாதம் பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். புத்திரர்கள் தவறான பழக்க வழக்கம் உள்ள நபர்களுடன் சேர்த்து சிரமப்படும் வாய்ப்புகள் உள்ளதால் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சிலரது குறுக்கீடுகளில் மனக்கசப்புகள் தோன்றி பின்னர் படிப்படியாக நிலைமை சீராகும். 
 
உத்தியோகஸ்தர்கள் வருமான வரித்துறை, சுங்க இலாகா தணிக்கை துறை ஆகியவற்றில் உயர்பதவி வகிப்பவர்களுக்கு தன் துறை சார்ந்த ஊழியர்கள் ஒத்துழைப்பு குறைவினால் இடம் மாற்றம் அல்லது துறை சார்ந்த அதிகாரிகளின் நெருக்குதல்கள் ஆகியவற்றுக்கு ஆளாகி புதிய அனுபவ பாடங்களைப் பெறுவார்கள். 
 
தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறிது சுணக்கமான நிலை அடைவார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேறுவர். பொருளாதார வரவுகள் சமச்சீராக இருக்கும். நற்செயலுக்கேற்ப புகழ் கிடைக்கும். 
 
பெண்கள் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். 
 
அரசியலில் உள்ளவர்கள் மிகவும் சிறப்பான பலன்களைக் காண்பர். அரசிடம் இருந்து சலுகைகள் கிடைக்கும். உயர்பதவிகள் கிடைக்கும். அதே வேளையில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மருத்துவ செலவு அதிகரிக்கலாம். 
 
கலைத்துறையினர் சிறந்த நிலைக்கு வரலாம். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். 
 
மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் படித்து நல்ல தேர்ச்சியும் புகழும் பெறுவார்கள். ஓவியப் பயிற்சிபெறும் மாணவர்கள் தங்கள் திறமையை நன்கு வெறிபடுத்தி பெயரும் புகழும் பெறுவார்கள். படிப்புக்கு தேவையான பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும். 
 
மூலம்:
இந்த மாதம் தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்வார்கள். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். வியாபாரிகள் சிலர் வெளிநாட்டில் கிளைகள் தொடங்குவார்கள். குலதெய்வத்தை வணங்குவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும்.
 
பூராடம்:
இந்த மாதம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்சினையில் நல்ல முடிவு வரும். வழக்குகள் சாதகமாகும். திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். வேலைசெய்யும் பிள்ளைகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வார்கள்.
 
உத்திராடம்:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் வந்துசேரும். தொழிலதிபர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோர்களால் பாராட்டப்படுவார்கள். நீண்டகாலமாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்துசேரும்.
 
பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 24, 25