புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (09:23 IST)

ஜூன் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன் (வ), புதன் -  ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது, சனி (வ) -  தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.  
கிரகமாற்றங்கள்:
 
04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே  இந்த மாதம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் சார்ந்த செலவுகள் குறையும். அடுத்தவர்களுக்கு உதவும் முன் யோசித்து செயல்படுங்கள். மூன்றாம் மனிதர்களின் தலையீட்டால் பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.
 
குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது முக்கியம்.
 
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் நீங்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். 

 
உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிட்டும்.  மேலதிகாரிகளிடம் உங்களது மீதான நல்ல எண்ணங்கள் மேலோங்கும். பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.
 
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். 
 
அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். 
 
பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை.
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.
 
அஸ்வினி:
இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
 
பரணி:
இந்த மாதம் வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
 
கார்த்திகை:
இந்த மாதம் குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.
 
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27
 
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி