செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (19:07 IST)

ஜனவரி 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:
ராசியில்  ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
07-01-2020 அன்று மாலை 4.25 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-01-2020 அன்று இரவு 8.22 மணிக்கு  சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-01-2020 அன்று கலை 5.38 மணிக்கு சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-01-2020 அன்று  மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. மனம் எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்  நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.

பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்.

அரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும். நிலுவையில் இருந்த பணப்பாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும்.

மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

மிருகசீரிஷம்:
இந்த மாதம்  உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எவ்வளவு திறமையாக படித்தாலும்பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.

திருவாதிரை:
இந்த மாதம் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும்  வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை  நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்

புனர்பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
பரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19