செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (12:38 IST)

தை மாத ராசி பலன்கள் 2023 – கடகம்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது  - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - சப்தம ஸ்தானத்தில் சனி, சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு  - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
15-01-2023 அன்று சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
23-01-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-02-2023அன்று புதன் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
13-02-2023 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்:
கடமை உணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். எதிர்பாலினரால் காரிய  அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள்  வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும்.

குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் உங்களது ஆலோசனையை கேட்டு நடப்பார்கள். உங்களது செயல்கள்  மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க, பட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் - 4:
இந்த மாதம் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள்  தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும்.

பூசம்:
இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.  மற்றவர்களுடன்  கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக  இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். 

ஆயில்யம்:
இந்த மாதம் ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் தீரும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடைகள் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜன: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: ஜன: 17, 18, 19