செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2023 (12:32 IST)

தை மாத ராசி பலன்கள் 2023 – மேஷம்

தை மாத ராசி பலன்கள் 2023 – மேஷம்


கிரகநிலை:
ராசியில் ராகு  - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்  - சப்தம ஸ்தானத்தில் கேது  - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சனி, சூரியன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் குரு - என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
15-01-2023 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
23-01-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-02-2023அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2023 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
அடுத்தவர் திருப்திபடும் வகையில் திறமையாக பேசி சமாளிக்கும் ஆற்றல் பெற்ற மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் பயணங்களால் நன்மை உண்டாகும்.  மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம்  காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை.

தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும்.  பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.
பெண்கள் திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும்.

கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள்.  கடன் பிரச்சனை தீரும். செல்வதில்லை உயரும்.

அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.

அஸ்வினி:
இந்த மாதம் பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட  கூடுதல் செலவு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை  வெளிபடும். 

பரணி:
இந்த மாதம் புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது  வார்த்தைக்கு  மதிப்பு அதிகரிக்கும்.

கார்த்திகை - 1:
இந்த மாதம் அடுத்தவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: பவுர்ணமியன்று பூஜை செய்து அம்மனை வணங்க காரியதடை நீங்கும். மன அமைதி ஏற்படும். வாழ்க்கை சிறப்படையும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜன: 17, 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: ஜன: பிப்: 7, 8