புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (11:48 IST)

மிதுனம் - மார்கழி மாத பலன்கள்

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம  பூர்வ,புண்ணிய  ஸ்தானத்தில் சுக்கிரன்   - ரண, ருண ரோக, சத்ரு ஸ்தானத்தில் குரு, புதன்  -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சனி  -  அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்   ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
 
தோல்வியை வெற்றி படிகளாக ஆக்கிக் கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரும் திறமை உடைய மிதுன ராசியினரே இந்த மாதம் வீண்  மனக்கவலை ஏற்படலாம். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர  செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும்.  வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை  அகலும். மனஸ்தாபங்கள் நீங்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கு  வியாஜ்ஜியங்களில் நிலுவைகள் தொய்வு ஏற்படலாம். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் நல்ல  முடிவுகள் வந்து சேரும். குடும்பச் செலவினங்கள் தாராளமாகும். பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.
 
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகுவீர்கள். அலுவலகத்தில் இருந்த  பழைய சட்டப் பிரச்னைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு வருமானம் நல்ல முறையில் வந்தாலும் போட்டிகளைச் சந்திப்பீர்கள். எனவே  பொறுப்புடன் நடந்துகொள்ளவும். நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். விரைவாக விற்கும் பொருட்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து விற்பனை செய்யவும். மற்றபடி செயல்படும் முறையை திருத்திக்கொண்டு பணியாற்றுவீர்கள்.
 
வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில்  உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அழகுநிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ்  வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு ஏற்ற காலமிது. தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள  சரியான சமயமிது.
 
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறனால் மாற்றுக் கட்சியினரையும் கவர்வீர்கள்.  தொண்டர்கள் உங்களுக்குக் கீழ் படிவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவால் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வெற்றியடைவீர்கள்.
 
கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். அனைவரையும் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை ஏற்பீர்கள். உங்கள்  திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். சக கலைஞர்களுடன் விரோதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். பெண்மணிகளுக்கு கணவரின் ஆதரவு  கிடைக்கும். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப முன்னேற்றத்திற்குப் பாடுபடுவீர்கள். குழந்தைகளால் பெருமை  அடைவீர்கள். உற்றார், உறவினர்களிடம் ரகசியங்களைப் பேச வேண்டாம்.
 
மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்து படித்து  வைத்துக்கொள்ளவும். உங்கள் கனவுகள் பலிக்கும். மற்றபடி விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
 
திருவாதிரை:
 
இந்த மாதம் அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும்  செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில்  பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
 
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
 
இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில்  இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி  கொடுப்பீர்கள். காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும்.
 
பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும். மரிக்கொழுந்தை அம்மனுக்குப் படைக்கவும்.
 
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
சந்திராஷ்டம தினம்: ஜனவரி 7, 8, 9 
அதிர்ஷ்ட தினம்: டிசம்பர் 29, 30; ஜனவரி 1.