1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (09:39 IST)

டிசம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

 
கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன், செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகநிலை உள்ளது.
 
கிரகமாற்றங்கள்:
04-12-2021 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 
05-12-2021 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 
06-12-2021 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 
28-12-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 
 
பலன்:
எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்ளக் கூடிய விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் கொடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் எடுப்பீர்கள். இந்த மாதம் பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். ஆனாலும் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம்.
 
தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.
 
குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. 
 
பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும்.
 
கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
 
அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.
 
மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். 
 
விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம்  தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும்.  போட்டிகள் குறையும்,  புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான  அலைச்சல் குறையும்.
 
அனுஷம்:
இந்த மாதம்  குடும்பத்தில்  இருப்பவர்களுடன் இணக்கமான  போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த  மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின்  எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.
 
கேட்டை:
இந்த மாதம்  திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்கள் கல்வியில்  முன்னேற்றத்திற்கு  இருந்த  முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
 
பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமையில் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பமும் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13