1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (12:21 IST)

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2023 - மீனம்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


கிரகநிலை:
ராசியில்  ராஹூ - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் குரு (வ) -  களத்திர  ஸ்தானத்தில் கேது -  அஷ்டம  ஸ்தானத்தில் சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  தொழில்  ஸ்தானத்தில் புதன் -  லாப  ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:
02-12-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-12-2023 அன்று சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-12-2023 அன்று சனி பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
25-12-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
27-12-2023 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
வெளியூர் பயணங்களை விரும்பும் மீன ராசி அன்பர்களே,  இந்த மாதம் தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் கடுமையான முயற்சிகள் தேவைப்படும். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும்.

உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக  செய்து முடிப்பார்கள். அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம்  எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால்  காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில்  வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  திடீர் கருத்து  வேற்றுமை ஏற்படலாம்.

உத்திரட்டாதி:
இந்த மாதம்  நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

ரேவதி:
இந்த மாதம்  நீண்ட நாட்களாக  முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள்  கைகூடும்.  கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30